Tuesday, April 9, 2013

நளாயினி புராணம்

 நளாயினி வரலாறு
பிரதிஷ்டானம் என்ற ஊரில் தொழுநோயால் அவதியுற்ற கவுசிகன் என்னும் அந்தணரும், அவர் மனைவி நளாயினியும் வாழ்ந்து வந்தனர். கணவன் தொழுநோயாளி என்றிருந்தும் அவன் மனைவி கற்புக்கரசியாய் அவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து கணவர் மனம் கோணாமல் வாழ்ந்து வந்தாள். ஆனால், கவுசிகன் மனைவியைத் துன்புறுத்தி வந்ததுடன் ஒருநாள் அவனைத் தான் விரும்பும் தாசி வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கூற அவளும் அவனை ஒரு கூடையில் உட்கார வைத்து தூக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழியில் மாண்டவ்யர் என்ற முனிவர் மன்னன் ஆணையின்படி கழுவேற்றப்பட்ட நிலையில் இருந்தார் என்று மகன் கூறத் தந்தை மாண்டவிய முனிவரின் அந்நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு மகன் மாண்டவ்யர் சிறுவயதில் பூச்சிகளைப் பிடித்து இம்சை செய்து வந்ததன் பலன் அது என்று கூறினான். மேலும் திருடர்கள் அவ்வூர் மன்னன் அரண்மனையில் திருடிவிட்டு ஓடிவருகையில் முனிவர் கழுத்தில் ஒரு முத்துமாலையைப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னால் துரத்தி வந்த அரண்மனை சேவகர்கள் முனிவர் கழுத்தில் முத்துமாலையைக் கண்டு அவரை மன்னன் முன்னிலையில் கொண்டு நிறுத்த, விசாரணையின் போது முனிவர் தவநிலை காரணமாக பேசாதிருக்க அவரைக் கழுவேற்றுமாறு மன்னன் உத்தரவிட, அதன்படி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டு இருந்தார்.
நளாயினி தன் கணவனைத் தாசியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சென்றவள், இருட்டின் காரணமாக, அவளது கூடை மாண்டவ்யர் மீது இடிக்க ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த முனிவர் தனக்குத் துன்பம் கொடுத்த அவன் சூரியோதயத்தில் தலைவெடித்து இறக்குமாறு சாபம் கொடுத்தார். இதைக்கேட்ட அந்த பத்தினி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சூரியன் உதிக்கக்கூடாது என்று பதில் சாபம் விட்டாள். உலகம் இருட்டில் மூழ்கிட அதன் காரணத்தை அறிந்த பிரமன் அத்திரிமுனிவர் ஆசிரமம் அடைந்து அவருடைய மனைவியாகிய அனுசூயை என்னும் பதிவிரதையிடம் நடந்த விவரங்களைக் கூறி நளாயினியைச் சந்தித்து எப்படியாவது சூரியோதயத்திற்கு வழிவகுக்குமாறு வேண்டினார். அனுசூயை அவ்வாறே நளாயினியின் இல்லம் அடைந்து அவளிடம் வந்த காரியத்தைக் கூறி அவள் சாபத்தை விலக்கிக் கொண்டு சூரியோதயம் ஏற்பட்டு உலகம் உய்யுமாறு தெரியுமாறு வேண்டிக்கொண்டாள். ஆனால் நளாயினி சூரியோதயமானால் கணவர் இறப்பார் என்று கூற கற்புக்கரசி அனுசூயை உன் கணவன் இறந்தாலும் நோய் நீங்கி அழகிய ஆண்மகனாய் எழுந்திருப்பார். நீயும் இன்ப வாழ்க்கை அடைவாள் என்று கூறி மகிழ்வித்தாள்.
சாபம் விலக சூரியன் உதிக்க, நளாயினியின் கணவர் இறந்துவிட, அனுசூயை இறந்தவர் ஆணழகனாக உயிர் பெறுமாறு கூற அவ்வாறே நிகழ நளாயினி, கணவருடன் இனிய வாழ்வு பெற்றாள். இதிலிருந்து பதிவிரதையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தேவர்களும், மும்மூர்த்திகளும் அருள்புரிவார்கள் என்று உணர இக்கதை கூறப்பட்டுள்ளது.

6 comments: